Red Alert | தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்.. சென்னைக்கு ஆரஞ்ச் அலர்ட்

 



Red Alert | தமிழகத்தில் 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட், சென்னை உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்; இந்திய வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது.தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் மற்றும் சென்னை உள்ளிட்ட 10மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதுதென்மேற்கு வங்க கடல் பகுதியில் இன்று காலை 5:30 மணிக்கு உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளது. இது மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து, நாளை, அக்டோபர் 22, 2025 பிற்பகலில் வடக்கு தமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திரப் பிரதேசக் கடற்கரைகளையொட்டி தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்ககடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்.அதன் பிறகு, அது மேற்கு-வடமேற்காக வடக்கு தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திரப் பிரதேசக் கடற்கரைகளை நோக்கி நகர்ந்து, அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் தீவிரமடைய வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழகத்தில் விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மற்றும் புதுச்சேரியின் காரைக்கால் மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுத்து வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதுசென்னை, காஞ்சிபுரம், திரூவள்ளூர், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட 10 மாவட்ட இன்று மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.