கரூர் நெரிசல் துயரம்.. மாமல்லபுரத்தில் 8 மணி நேரம் சந்திப்பு.. தவெக தலைவர் விஜய் அளித்த வாக்குறுதிகள் என்ன?

 


ரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேரின் 38 குடும்பங்களை மாமல்லபுரத்தில் தவெக தலைவர் விஜய் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.கரூர் நெரிசலில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தவெக தலைவர் விஜய் ஆறுதல் கூறினார்.கடந்த 27 ஆம் தேதி கரூர் வேலுச்சாமிபுரத்தில் தவெக தலைவர் விஜயின் பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு காணொலிக் காட்சி மூலம் ஆறுதல் கூறிய விஜய், நேரில் வந்து சந்திப்பதாகவும் உறுதியளித்திருந்தார்.ஆனால், பாதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று சந்திக்க காவல்துறை அனுமதி வழங்கவில்லை என தவெக தரப்பில் கூறப்படும் நிலையில், அவர்களை சென்னைக்கு அழைத்து வந்து விஜயை சந்திக்கவைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி, கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை மாமல்லபுரத்தில் இன்று தவெக தலைவர் விஜய் நேரில் சந்திப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.