செல்லப்பிராணிகள் வளர்ப்போர் கவனத்திற்கு.. இனி ரூ.5 ஆயிரம் அபராதம்.. சென்னை மாநகராட்சி முக்கிய அறிவிப்பு!

 



சென்னையில் நாய்கள் உள்ளிட்ட செல்லப் பிராணிகளை வீடுகளில் வளர்க்க வெறும் 50 ரூபாய் கட்டணம் செலுத்தி உரிமம் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.சென்னை மாநகராட்சியில் செல்லப்பிராணிகள் வளர்ப்பை முறைப்படுத்த இணையதளம் வாயிலாக உரிமம் பெறும் முறை 2023ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ளது. தற்போது வரை சென்னையில் சுமார் 10 ஆயிரம் செல்லப்பிராணிகளுக்கு இணைய வழியில் உரிமம் வழங்கப்பட்டுள்ளதுஉரிமம் பெற உரிமையாளர்கள் தங்கள் விவரங்களை பதிவு செய்து செல்லப்பிராணியின் புகைப்படம் உள்ளிட்ட விவரங்களை பதிவேற்றி 50 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். வெறிநோய் தடுப்பூசி செலுத்தப்பட்ட சான்றிதழ் மற்றும் மைக்ரோ சிப் பொருத்தப்பட்ட விவரம் ஆகியவற்றை பதிவுபெற்ற கால்நடை மருத்துவர்கள் மூலம் பதிவேற்றம் செய்ய வேண்டும்.இந்த தகவல்கள் மண்டல கால்நடை மருத்துவ அலுவலர்களால் சரிபார்க்கப்பட்ட பிறகு செல்லப்பிராணி உரிமையாளர்களுக்கு உரிமம் வழங்கப்பட்டு வருகிறது. உரிமம் பெறாதவர்களுக்கு, வரும் 24ஆம் தேதி முதல் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்க சென்னை மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.