தங்கம் விலையில் வரலாறு காணாத புதிய உச்சம்; ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,080 உயர்வு



 சென்னை: சென்னையில் இன்று (அக் 21) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,080 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.97,440க்கு விற்பனை செய்யப்படுகிறது.சர்வதேச நிலவரங்களால், தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் கடந்த சனிக்கிழமை ஆபரண தங்கம் சவரனுக்கு, 2,000 ரூபாய் சரிவடைந்து, 95,600 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி கிராமுக்கு, 13 ரூபாய் குறைந்து, 190 ரூபாய்க்கு விற்பனையானது.அன்றைய தினம் மதியம் (அக்டோபர் 18) தங்கம் விலை கிராமுக்கு, 50 ரூபாய் உயர்ந்து, 12,000 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 400 ரூபாய் அதிகரித்து, 96,000 ரூபாய்க்கு விற்கப்பட்டது. நேற்று (அக் 20) ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 குறைந்து ஒரு சவரன் ரூ.95,360க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.80 குறைந்து ஒரு கிராம் ரூ.11,920க்கு விற்பனை ஆனது.
இந்நிலையில் இன்று (அக் 21) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை, சவரனுக்கு ரூ.2,080 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.97,440க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கிராமுக்கு ரூ.260 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.12,180க்கு விற்பனை ஆகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 குறைந்து, ஒரு கிராம் ரூ.188 க்கு விற்பனை செய்யப்படுகிறது.கடந்த இரண்டு நாட்களாக தங்கம் விலை குறைந்து வந்த நிலையில், இன்று அதிரடியாக தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,080 உயர்ந்து இருக்கிறது.மேலும் அதிகரிக்கும்!இது தொடர்பாக, நகை வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி கூறியதாவது: அமெரிக்க அதிபர் டிரம்பின் நடவடிக்கையால், தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேலும் தங்கம் விலை தொடர்ந்து அதிகரிக்கும். ஒரு சில நாட்களில், தங்கம் விலை ரூ. ஒரு லட்சத்தை தாண்டி விடும். இவ்வாறு அவர் கூறினார்.