🌪️ டிட்வா புயல்: இலங்கையில் 355 பேர் உயிரிழப்பு – 11 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு


தென்மேற்கு வங்கக்கடலில் உருவான டிட்வா புயல், அண்டை நாடான இலங்கையில் பெரும் இயற்கை பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஒரு வாரமாக தொடர்ந்த கனமழை, நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக ஏற்பட்ட சேதத்தின் அளவு நாளும் அதிகரித்து வருகிறது.

அதிகாரப்பூர்வ தகவல்படி, டிட்வா புயலின் தாக்கத்தால் மொத்தம் 355 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 366 பேர் இதுவரை காணாமல் போயுள்ளனர்.

மாவட்ட வாரியாக உயிரிழப்புகள்:

கண்டி – 88 பேர்

நுவரெலியா – 75 பேர்

பதுளை – 71 பேர்

குருநாகல் – 37 பேர்

மாத்தளை – 23 பேர்


இந்த மாவட்டங்களில் நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு அதிகம் பதிவாகியுள்ளது.

மக்கள் பாதிப்பு

மோசமான வானிலை மற்றும் தொடர்ந்த மழை காரணமாக 318,252 குடும்பங்களைச் சேர்ந்த 11,56,860 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் கடந்த சில ஆண்டுகளில் ஏற்பட்ட மிகப்பெரிய பேரழிவுகளில் இதுவும் ஒன்றாக கருதப்படுகிறது. மீட்பு பணிகள் தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றன.