டிட்வா புயல் எதிரொலி: 5 மாவட்டம், நாளை 2 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்

 



சென்னை: செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை ஆகிய 5 மாவட்டங்களுக்கு இன்று (நவ.,29) அதி கனமழைக்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: வங்கக்கடலில் மணிக்கு 8 கிலோ மீட்டர் வேகத்தில் தமிழக கடலோர பகுதிகளை டிட்வா புயல் நெருங்கி வருகிறது. சென்னையில் இருந்து தெற்கே 380 கிலோ மீட்டர் தொலைவில் புயல் மையம் கொண்டுள்ளது. இதன் காரணமாக, இன்று அதி கனமழை (ரெட் அலெர்ட்) பெய்ய

வாய்ப்புள்ள மாவட்டங்கள்:

செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை ஆகிய 5 மாவட்டங்களுக்கு இன்று (நவ.,29) மிக கனமழைக்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.

ஆரஞ்சு அலெர்ட்

அதேபோல், திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய 13 மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.

மஞ்சள் அலெர்ட்

வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, நமாக்கல், கரூர் ஆகிய 6 மாவட்டங்களுக்கு இன்று கனமழைக்கான மஞ்சள் அலெர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.

நாளை (நவ.,30)

திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய 2 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.

நாளை (நவ.,30) மிக கனமழை (ஆரஞ்சு அலெர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:

* சென்னை

* காஞ்சிபுரம்

* செங்கல்பட்டு

* விழுப்புரம்

* திருவண்ணாமலை

* வேலூர்

* திருப்பத்தூர்

* தர்மபுரி

* கிருஷ்ணகிரி

நாளை (நவ.,30) கனமழை (மஞ்சள் அலெர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:

* கடலூர்

* கள்ளக்குறிச்சி

* சேலம்

திருவள்ளூர் மாவட்டத்திற்கு டிசம்பர் 1ம் தேதி கனமழைக்கான மஞ்சள் அலெர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.