வீட்டில் தானே இருக்கிறார்.. பசும்பொன் வரமாட்டாராம்.. விஜய் செய்த செயல்.. கடுப்பான தென் மாவட்டங்கள்!

 


சென்னை: நடிகர் மற்றும் அரசியல்வாதியான விஜய், தமிழக வெற்றிக் கழகம் கட்சியைத் தொடங்கிய பின்னர், தொடர்ந்து இரண்டாவது ஆண்டாகவும் பசும்பொன்னில் நடைபெற்ற தேவர் ஜெயந்தி கொண்டாட்டங்களில் பங்கேற்காதது மீண்டும் கவனத்தை ஈர்த்து விமர்சனத்தையும் எழுப்பியுள்ளது.விஜய் சென்னையில் உள்ள தனது வீட்டில் சுதந்திரப் போராட்ட வீரர் முத்துராமலிங்கத் தேவரின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய போதிலும், பாரம்பரிய நினைவிடத்தில் அவர் இல்லாதது தென் தமிழக அரசியல் வட்டாரங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.தேவர் ஜெயந்தி விஜய் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 30 அன்று அனுசரிக்கப்படும் தேவர் ஜெயந்தி, குறிப்பாக தேவர் சமூகத்தினரிடையே, முக்குலத்தோர் இடையே தென் மாவட்டங்களில் ஆழமான உணர்வுபூர்வமான மற்றும் அரசியல் முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. அனைத்துக் கட்சித் தலைவர்களும் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பசுமலையில் உள்ள நினைவிடத்திற்கு நேரில் சென்று மரியாதை செலுத்துவது வழக்கம். தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக விஜய் இந்த நிகழ்விற்கு நேரடியாக செல்லவில்லை. நேரடியான மரியாதையை எதிர்பார்த்த உள்ளூர் தலைவர்கள் மற்றும் சமூகத்தினரிடையே விஜயின் செயல் அதிருப்தியை சம்பாதித்து உள்ளது. விஜய்யின் இம்முடிவு தவறானது, அவர் எங்களை தலைவரை மரியாதை செய்யாமல் தவிர்க்கிறார், வீட்டில் இருந்தபடியே எல்லோருக்கும் மரியாதையை செய்யலாம்.. அரசியல் செய்யலாம் என்று நினைக்கிறார், அது தவறு என்று சில தென் மாவட்டத் தலைவர்கள் தனிப்பட்ட முறையில் ஏமாற்றத்தை வெளிப்படுத்தினர்.விஜய் வீட்டில் இருந்தபடியே மரியாதை பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பிறந்தநாள் மற்றும் குரு பூஜை தினத்தில் அவருக்கு பலரும் மதுரையில் மரியாதை செய்தனர். தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வீட்டில் இருந்தபடியே மரியாதை செய்தார்.பனையூர் வீட்டில் இருந்தபடியே அவர் மரியாதை செய்தார். அதன்பின் அவர் செய்த போஸ்டில், விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்றவர், ஏழை, எளிய மக்களின் முன்னேற்றத்திற்காகத் தமது வாழ்நாள் முழுவதும் பாடுபட்டவர், அய்யா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்கள். சமூக ஒற்றுமை, மத நல்லிணக்கத்திற்காகத் தன்னை அர்ப்பணித்த அய்யா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் பிறந்தநாள் மற்றும் குரு பூஜை தினத்தில், எமது அலுவலகத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன்., என்று கூறினார். தேவர் ஜெயந்தியை ஒட்டி மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மரியாதை செய்தார். அவருடன் அக்கட்சி நிர்வாகிகள் நேற்று மரியாதை செலுத்தினர். இரண்டு ஆண்டுகளாக செல்லவில்லை விஜய், தமிழக வெற்றிக் கழகம் கட்சியைத் தொடங்கிய பின்னர், தொடர்ந்து இரண்டாவது ஆண்டாகவும் பசும்பொன்னில் நடைபெற்ற தேவர் ஜெயந்தி கொண்டாட்டங்களில் பங்கேற்காதது மீண்டும் கவனத்தை ஈர்த்து விமர்சனத்தையும் எழுப்பியுள்ளதுதென் மாவட்டங்களில் அரசியல் செய்ய விஜய் நினைக்கிறார். ஆனால் எங்கள் தலைவரை அவர் உரிய மரியாதை செய்யவில்லை. ஒருமுறை செய்தால் பரவாயில்லை.. அப்போது ஜனநாயகம் ஷூட்டிங் நடந்தது. இப்போது வீட்டில் தானே இருக்கிறார் . பசும்பொன் வர முடியாதா? வேண்டாம் நந்தனம் கூட செல்லலாம்.. அங்கே சிலை இருக்கிறதே.. அங்கே வைக்க முடியாதா? பட்டினப்பாக்கம் செல்லும் அவர்.. அங்கிருந்து 10 கிமீ கூட இல்லாத.. நந்தனத்திற்கு செல்ல முடியாதா? என்று தென் மாவட்ட அரசியல் தலைகள் பலர் கேள்விகளை எழுப்பி உள்ளனர்.