தங்கம் விலை அடுத்த வாரம் எப்படியிருக்கும்..? புட்டு புட்டு வைக்கும் டேட்டா..!!

 

வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் சர்வதேச சந்தையில் பல தடைகளை தாண்டி 1 அவுன்ஸ் 4114 டாலருக்கு முடிந்துள்ளது, 4100 டாலருக்கு அதிகமாக முடிந்ததே முதலீட்டாளர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது. இப்படியிருக்கையில் எம்சிஎக்ஸ் சந்தை வர்த்தக முடிவில் 1.5 சதவீத சரிவில் இருந்து மீண்டு வெறும் 0.16 சதவீத சதவீத முடிவுடன் 1,23,255 ரூபாய் அளவீட்டை தொட்டுள்ளது.இதன் மூலம் சனிக்கிழமை ரீடைல் சந்தை வர்த்தகத்தில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 1000 ரூபாய் உயர்ந்து வியாழக்கிழமை பதிவான 1,15,000 ரூபாய் அளவீட்டை பதிவு செய்துள்ளது. இதுவே 24 கேரட் தங்கம் விலை 1080 ரூபாய் உயர்ந்து 1,25,450 ரூபாயாக உயர்ந்துள்ளது.இதேபோல் ரீடைல் சந்தையில் இன்று ஆபரண தங்கம் விலை ஒரு சவரன் 864 ரூபாய் உயர்ந்து 1,00,360 ரூபாயாக உள்ளது. வெள்ளி விலையில் எவ்விதமான மாற்றமும் இல்லாமல் ஒரு கிலோ 1,70,000 ரூபாயாகவே உள்ளது. பிளாட்டினம் விலை 10 கிராம் 560 ரூபாய் குறைந்து 45,280 ரூபாயாக உள்ளது.இந்த நிலையில் அடுத்த வாரம் தங்கம் விலையின் போக்கை தீர்மானிக்கும் 5 முக்கியமான காரணிகள் உள்ளது.அமெரிக்கா-சீனா வர்த்தக பேச்சுவார்த்தைகள் அமெரிக்கா மற்றும் சீனா இடையே வெள்ளிக்கிழமை மலேசியாவில் தொடங்கவுள்ள உயர்மட்ட வர்த்தக பேச்சுவார்த்தைகளில், சீனாவின் துணைப் பிரதமர் ஹி லிஃபெங் (He Lifeng), அமெரிக்க கருவூல செயலர் ஸ்காட் பெசென்ட் (Scott Bessent) மற்றும் அமெரிக்காவின் வர்த்தக பிரதிநிதியான Jamieson Greer ஆகியோர் பங்கேற்கின்றனர்.

இந்த பேச்சுவார்த்தை அமெரிக்கா-சீனா மத்தியிலான பல கட்ட வர்த்தக போர்-ஐ முடிவுக்கு கொண்டு வரும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது. இரு நாடுதள் மத்தியிலான வர்த்தக பிரச்சனை குறைந்தால் பொருளாதார பாதிப்பு குறைந்து தங்கம் மீதான ஈர்ப்பு குறையும், இதனால் தங்கம் விலை குறையும். டிரம்ப் - ஜி ஜின்பிங் சந்திப்பு மலேசியா பேச்சுவார்த்தையை தொடர்ந்து அடுத்த வியாழக்கிழமை, ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு மாநாட்டின் ஒரு பகுதியாக, தென் கொரியாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திக்கவுள்ளனர். இரு தலைவர்களுக்கு மத்தியிலான இந்த பேச்சுவார்த்தை, சீனாவின் அரிய புவி உலோக ஏற்றுமதி கட்டுப்பாடுகளுக்கு பதிலடியாக, அமெரிக்கா விதிக்க உள்ள 100 சதவீத வரி விதிப்பு மற்றும் மென்பொருள் அடிப்படையிலான ஏற்றுமதிகளை கட்டுப்படுத்தும் திட்டத்திற்கு இறுதி முடிவுகள் எடுக்கப்படும். அமெரிக்க அரசு மூடல் அமெரிக்க அரசின் ஷட்டவுன் 24வது நாளாக தொடர்கிறது, இது வரலாற்றில் இரண்டாவது நீண்ட ஷட்டவுன் காலமாக உள்ளது. ரிப்பளிக் கட்சியின் நிதி மசோதா, புதன்கிழமை செனட்டில் 12வது முறையாக ஒப்புதல் பெற முடியாமல் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் தோல்வியடைந்தது. இதற்கான வாக்கெடுப்பில் 54-46 என்ற வாக்குகளை பெற்ற நிலையில் தோல்வியை சந்தித்தது. இந்த நிலை, அரசு செயல்பாடுகளை பாதித்து, பொருளாதார நிச்சயமின்மையை உருவாக்குகிறது.


ரஷ்யாவுக்கு தடைகள் டொனால்ட் டிரம்ப், தனது இரண்டாவது பதவிக்காலத்தில் முதல் முறையாக, உக்ரைன் தொடர்பாக ரஷ்யாவுக்கு எதிராக புதன்கிழமை தடைகளை விதித்தார். ரஷ்யாவுக்கு எதிராகவும், ரஷ்யாவின் செயல்பாடுகளை விமர்ச்சி பேசிய டிரம்ப் முதல் முறைாக ரஷ்யா மீது தடையை விதித்துள்ளது சர்வதேச வர்த்தகத்திலும், பொருளாதாரத்திலும் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. தற்போது டிரம்ப் விதித்துள்ள இந்த தடைகள், ரஷ்யாவின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனங்களான லுக்ஆயில் மற்றும் ரோஸ்னெப்ட் ஆகியவற்றை நிறுவனங்களை டார்கெட் செய்து விதிக்கப்பட்டு உள்ளது. இந்த நடவடிக்கை, உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர ரஷ்யாவை அழுத்தம் கொடுக்கும் முயற்சியாக பார்க்கப்படுகிறது. இது, உலக எண்ணெய் சந்தையில் பதற்றத்தை ஏற்படுத்தி, பணவீக்க அச்சங்களை உயர்த்தியுள்ளது. இதனால் உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சியை பாதிக்கும், இதனால் தங்கத்திற்கான டிமாண்ட் அதிகரிக்கும் வாய்ப்பும் உள்ளது. பெடரல் வங்கியின் வட்டி விகித முடிவு அமெரிக்க மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வ், அடுத்த வாரம் தனது பென்ச்மார்க் வட்டி விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் குறைக்கவுள்ளதாக ராய்ட்டர்ஸ் கருத்து கணிப்பு தெரிவிக்கிறது. டிசம்பர் மாத கொள்கை கூட்டத்திலும் இதேபோல் மற்றொரு குறைப்பு எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சிஎம்இ ஃபெட்வாட்ச் கருவி, 25 அடிப்படை புள்ளிகள் விகித குறைப்புக்கு 97 சதவீத வாய்ப்பு உள்ளதாக காட்டுகிறது. இந்த விகித குறைப்பு பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் முயற்சியாக இருந்தாலும் பணவீக்கத்தை அதிகரிக்கவும் வாய்ப்பு உள்ளது. பொதுவாக வட்டி விகிதம் குறையும் போது தங்கத்தில் அதிகப்படியான முதலீடுகள் செல்லும், இதனால் தங்கம் விலை உயரும். தீர்வு இந்த 5 காரணிகளும் தான் அடுத்த வாரம் தங்கம் விலையை தீர்மணிக்கிறது, சீனா - அமெரிக்கா மத்தியிலான வர்த்தக போர் தணியும் பட்சத்தில் தங்கம் விலை குறைய வாய்ப்புள்ளது. ஆனால் இதேநேரத்தில் மற்ற 3 காரணிகளும் தங்கம் விலை உயர்வுக்கு வழிவிடும் காரணத்தால் அடுத்த ஒரு வாரத்திற்கு இதன் விலையில் அதிகப்படியான தடுமாற்றம் இருக்கும். இதனால் தங்கத்தில் முதலீடு செய்ய திட்டமிட்டால் விலை குறையும் போது வாங்கிவிட்டு, அதை நீண்ட கால அடிப்படையில் வைத்துக்கொள்ள வேண்டும். குறுகிய கால முதலீட்டாளர்களுக்கு தங்கம் தற்போதைய சூழ்நிலையில் பலன் அளிக்காது.