காசில்லைனு புலம்பி..60 டன் தங்கத்தை வாங்கிக் குவித்த மக்கள்! 800 கோடியை குடித்தே அழித்த குடிகாரர்கள்

 



சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் சுமார் ஒரு லட்சத்து 25 கோடி அளவுக்கு வர்த்தகம் நடைபெற்றிருக்கிறது. தங்கத்தை மட்டுமே சுமார் 85 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு மக்கள் வாங்கி இருக்கிறார்கள். சுமார் 50 முதல் 60 டன் தங்கம் விற்பனையானதாக சொல்லப்படுகிறது. இது மட்டும் அல்லாமல் டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின் ஆகியவற்றின் விற்பனையும் அதிகரித்திருக்கிறது. தமிழகத்தில் டாஸ்மாக் மதுகடைகள் மூலம் சுமார் 789 கோடி ரூபாய் அளவுக்கு விற்பனை நடந்து இருப்பதும் குறிப்பிடத்தக்கதுஇந்தாண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் மகிழ்ச்சி 'மழை'யோடு, பொருளாதார ரீதியாகவும் புதிய சாதனை பதிவு செய்யப்பட்டுள்ளது. தங்கம், வெள்ளி, மின்சாதனங்கள் மற்றும் மதுவிற்பனை போன்ற துறைகளில் விற்பனை அதிக அளவில் உயர்ந்துள்ளதுடன், மொத்த விற்பனை மதிப்பு ரூ.1.25 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது.முக்கியமாக தங்கத்தின் விலை உயர்ந்திருந்த போதிலும், மக்களிடம் தங்க நகை வாங்கும் ஆர்வம் குறையவில்லை. தந்தேரஸ் மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் 50 முதல் 60 டன் தங்கம் விற்பனையாகியுள்ளது. இதன் மொத்த மதிப்பு சுமார் ரூ.85,000 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.

தீபாவளி விற்பனை 

இது கடந்த ஆண்டை விட சுமார் 35 முதல் 40 சதவீதம் அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது. தங்கத்தின் விலை கடந்த ஆண்டை ஒப்பிடும் போது குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்ததால், விற்பனையின் மதிப்பு உயர்ந்தாலும், அளவில் அதே அளவிலேயே இருப்பதாக இந்திய ஜெம் அண்ட் ஜுவல்லரி கவுன்சில் தலைவர் ராஜேஷ் ரோக்தே தெரிவித்துள்ளார். தங்க விலை உயர்ந்ததால் பலர் மாற்றாக வெள்ளி நகைகள், பாத்திரங்கள் வாங்கியுள்ளனர்.

தங்க விற்பனை 

இதன் காரணமாக வெள்ளி விற்பனை இருமடங்கு உயர்ந்துள்ளது. தீபாவளி முடிவில் மொத்த தங்க விற்பனை 100 முதல் 120 டன் வரை, அதாவது ரூ.1 லட்சம் கோடி முதல் ரூ.1.35 லட்சம் கோடி வரையிலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், ஜிஎஸ்டி குறைப்பும் பண்டிகை விற்பனையில் முக்கிய பங்காற்றியுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் ஜிஎஸ்டி கட்டண அமைப்பை மத்திய அரசு மறுசீரமைத்தது. இதன் மூலம் 5%, 12%, 18%, 28% என இருந்த நான்கு அடுக்கு வரி அமைப்பு தற்போது 5% மற்றும் 18% என இரண்டு அடுக்குகளாக குறைக்கப்பட்டுள்ளது. இதை பிரதமர் நரேந்திர மோடி "ஜிஎஸ்டி 2.0 - தீபாவளி பரிசு" என்று குறிப்பிட்டார்.

 ஜிஎஸ்டி குறைப்பு 

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும், ஜிஎஸ்டி குறைப்பால் நுகர்வோருக்கு நேரடி பலன் கிடைத்துள்ளதாகவும், இதன் காரணமாக கார், ஏசி, வாஷிங் மெஷின், டிவி போன்ற மின்சாதனங்களின் விற்பனை அதிகரித்துள்ளது என்றும் கூறியுள்ளார். இந்திய வர்த்தக சங்கம் (CAIT) வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, இந்த தீபாவளி காலத்தில் மின்சாதனங்களின் மொத்த விற்பனை மட்டும் ₹10,000 கோடிக்கு மேல் உயர்ந்துள்ளது. இதன் மூலம் சுமார் 25 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.

தங்க விற்பனை 

இதன் காரணமாக வெள்ளி விற்பனை இருமடங்கு உயர்ந்துள்ளது. தீபாவளி முடிவில் மொத்த தங்க விற்பனை 100 முதல் 120 டன் வரை, அதாவது ரூ.1 லட்சம் கோடி முதல் ரூ.1.35 லட்சம் கோடி வரையிலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், ஜிஎஸ்டி குறைப்பும் பண்டிகை விற்பனையில் முக்கிய பங்காற்றியுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் ஜிஎஸ்டி கட்டண அமைப்பை மத்திய அரசு மறுசீரமைத்தது. இதன் மூலம் 5%, 12%, 18%, 28% என இருந்த நான்கு அடுக்கு வரி அமைப்பு தற்போது 5% மற்றும் 18% என இரண்டு அடுக்குகளாக குறைக்கப்பட்டுள்ளது. இதை பிரதமர் நரேந்திர மோடி "ஜிஎஸ்டி 2.0 - தீபாவளி பரிசு" என்று குறிப்பிட்டார். ஜிஎஸ்டி குறைப்பு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும், ஜிஎஸ்டி குறைப்பால் நுகர்வோருக்கு நேரடி பலன் கிடைத்துள்ளதாகவும், இதன் காரணமாக கார், ஏசி, வாஷிங் மெஷின், டிவி போன்ற மின்சாதனங்களின் விற்பனை அதிகரித்துள்ளது என்றும் கூறியுள்ளார். இந்திய வர்த்தக சங்கம் (CAIT) வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, இந்த தீபாவளி காலத்தில் மின்சாதனங்களின் மொத்த விற்பனை மட்டும் ₹10,000 கோடிக்கு மேல் உயர்ந்துள்ளது. இதன் மூலம் சுமார் 25 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.